குறைந்தது ஏடிஎம் பயன்பாடு.. அதிகரித்தது ஸ்வைப்

குறைந்தது ஏடிஎம் பயன்பாடு.. அதிகரித்தது ஸ்வைப்
குறைந்தது ஏடிஎம் பயன்பாடு.. அதிகரித்தது ஸ்வைப்

பிரதமர் மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு ஏடிஎம் பயன்பாடு குறைந்து கார்டுகள் மூலம் நடைபெறும் பணப் பரிவர்த்தனை அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஏடிஎம் வாசல்களில் வரிசையில் நின்றிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கார்டு பழக்கத்திற்கு மாறினர். தற்போது ஏடிஎம்களில் பணம் கிடைத்தாலும் அவர்களின் கார்டு ஸ்வைப் பழக்கம் மாறவில்லை.

பொதுவாகவே மோடியின் ஆட்சிக்காலத்தில் புதிய ஏடிஎம்கள் நிறுவப்படுவது கடந்த காங்கிரஸ் ஆட்சியை ஒப்பிடும் போது குறைவுதான் என்கின்றன புள்ளி விபரங்கள்.

கடந்த மே 2014 முதல் ஏப்ரல் 2017 வரையிலான பிரதமர் மோடியின் மூன்றாண்டு கால ஆட்சிக் காலத்தில் புதிதாக நிறுவப்படும் ஏடிஎம்-களின் எண்ணிக்கை கடந்த காங்கிரஸ் ஆட்சியை ஒப்பிடும் போது 91 சதவிகிதம் வரையில் குறைந்திருக்கிறது.

அதே சமயத்தில் கார்டு ஸ்வைப் இயந்திரங்களின் எண்ணிக்கை 143 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கார்டுகளை ஸ்வைப் செய்யும் பணப்பரிவர்த்தனைகளும் அதிகரித்துள்ளன. கடந்த காங்கிரஸ் ஆட்சியை ஒப்பிடும் போத தற்போது கார்டு பணப்பரிவர்த்தனை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com