\
ஏடிஎம் இயந்திரமே திருட்டு

ஏடிஎம் இயந்திரமே திருட்டு

ஏடிஎம் இயந்திரமே திருட்டு
Published on

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாம்போர் நகரில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரம் ஒன்று திருடப்பட்டுள்ளது. 

புலவாமா மாவட்டத்தின் பாம்போர் நகரில் உள்ள ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கத்லாபால் சௌக் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த எச்டிஎஃப்சி வங்கியின் ஏடிஎம் இயந்திரம் திருடப்பட்டுள்ளது. ஏடிஎம் மையத்துக்கு பாதுகாவலர் இல்லாததைப் பயன்படுத்திக் கொண்ட திருடர்கள், கடந்த திங்கள்கிழமை நள்ளிரவில் திருட்டை அரங்கேற்றியுள்ளனர். இப்போதுதான் வெளியே தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.5.50 லட்சம் பணம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அனந்த்நாக் மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த பாரத ஸ்டேட் வங்கியின் 2 ஏடிஎம் இயந்திரங்கள் இம்மாத தொடக்கத்தில் திருடப்பட்டது. ஆனால், அதுதொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com