\
அதிஷி
அதிஷிபுதியதலைமுறை

டெல்லி முதல்வராக அதிஷி செப். 21ம் தேதி பதவியேற்பு?

டெல்லி முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்த நிலையில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூடி புதிய முதலமைச்சராக அதிஷியை தேர்வு செய்தனர்.
Published on

டெல்லி மாநில முதலமைச்சராக அதிஷி நாளை மறுநாள் பதவியேற்பார் என தகவல் வெளியாகிவுள்ளது.

டெல்லி முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்த நிலையில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்
கூடி புதிய முதலமைச்சராக அதிஷியை தேர்வு செய்தனர். டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவை சந்தித்து கெஜ்ரிவால் ராஜினாமா கடிதமும், அதிஷி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தையும் அளித்தனர்.

இந்நிலையில், இருவரின் கடிதத்தையும் குடியரசுத் தலைவருக்கு துணைநிலை ஆளுநர் சக்சேனா அனுப்பி வைத்தார். அதில், முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிஷி வரும் 21ஆம் தேதி பதவியேற்க முன்மொழிந்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் ஆம் ஆத்மி கட்சி தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை. டெல்லி சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறவுள்ளதால், அடுத்த 6 மாதங்களுக்கு மட்டுமே அதிஷி முதலமைச்சராக பதவி வகிப்பார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com