அதிஷி
அதிஷிபுதிய தலைமுறை

டெல்லி முதல்வராக இன்று பதவியேற்கிறார் அதிஷி!

டெல்லி முதல்வராக அதிஷி இன்று பதவியேற்கிறார். அவருடன் 5 அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

டெல்லி முதல்வராக அதிஷி இன்று பதவியேற்கிறார். அவருடன் 5 அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி முதல்வராக இருந்த அர்விந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய முதல்வராக அதிஷி தேர்வு செய்யப்பட்டார்.

டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவை சந்தித்து கெஜ்ரிவால் ராஜினாமா கடிதத்தை அளித்த நிலையில் முதல்வராக தேர்வு செய்யப்பட்ட அதிஷி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தையும் அளித்தனர். இருவரின் கடிதத்தையும் துணைநிலை ஆளுநர் சக்சேனா அனுப்பி வைத்த நிலையில், கெஜ்ரிவாலின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

அதிஷி
திருப்பதி லட்டு சர்ச்சையை அடுத்து, பழனி பஞ்சாமிர்தம் நெய்யில் கலப்படம் என பரவிய தகவல்-உண்மை இதுதான்!

மேலும், டெல்லி முதல்வராக அதிஷி பதவியேற்க குடியரசுத் தலைவர் திரளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, இன்று டெல்லி ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறும் என ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிஷியுடன் இணைந்து கோபால் ராய், சவ்ரப் பரத்வாஜ், கைலாஷ் கெலாட் உள்ளிட்ட 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com