\
தடகள வீராங்கனை ’ஹீமா’வுக்கு டி.எஸ்.பி பதவி - அசாம் அரசு அறிவிப்பு

தடகள வீராங்கனை ’ஹீமா’வுக்கு டி.எஸ்.பி பதவி - அசாம் அரசு அறிவிப்பு

தடகள வீராங்கனை ’ஹீமா’வுக்கு டி.எஸ்.பி பதவி - அசாம் அரசு அறிவிப்பு
Published on

‘திங் எக்ஸ்பிரஸ்’ என செல்லமாக அழைக்கப்படுபவர் இந்திய தடகள வீராங்கனை ஹீமா தாஸ். அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். இளையோருக்கான தடகள சாமியன்ஷிப் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இதில் ஆசிய போட்டிகளில் கலப்பு மற்றும் மகளீர் 4x400 பிரிவில் அவர் தங்கம் வென்றுள்ளார். இந்நிலையில் ஹீமாவுக்கு டி.எஸ்.பி பதவி கொடுத்து கெளரவித்துள்ளது அசாம் மாநில அரசு.

“இந்த பதவியும், பொறுப்பு தனக்கு உத்வேகமும், ஊக்கமும் கொடுக்கும்” என ஹீமா தாஸ் தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு அரசு பதவி மற்றும் பணியில் அமர்த்தப்பட்ட உள்ளதாக அமைச்சரவையில் முடிவு  செய்யபப்ட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com