முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரையே வாக்காளர் பட்டியலில் இருந்து தூக்கிய விஷயம் வெளியாகியுள்ளது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இப்போது 92 வயது. இவர் உத்தரபிரதேச மாநிலம், லக்னோ தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக 1991ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை பதவி வகித்தார். இவரது பெயர் லக்னோ மாநகராட்சி பாபு பனாரசிதாஸ் வார்டு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. கடைசியாக இவர் 2000ம் ஆண்டு நடந்த மாநகராட்சி தேர்தலின்போது லக்னோவில் வாக்களித்தார். அத்துடன் 2004ம் ஆண்டு லக்னோ பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டபோதும் இவர் அங்கு வாக்கு அளித்தார். பல வருடமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததால் நீண்ட காலமாக அவர் லக்னோவில் வசிக்கவில்லை.
இப்போது அங்கு மாநகராட்சி தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் வாஜ்பாயின் பெயர் லக்னோ மாநகராட்சி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதை மாநகராட்சி மண்டல அதிகாரி அசோக்குமார் சிங் உறுதி செய்துள்ளார்.