இந்தியா
டெல்லி நட்சத்திர ஓட்டலில் பயங்கர தீ: 9 பேர் பரிதாப பலி
டெல்லி நட்சத்திர ஓட்டலில் பயங்கர தீ: 9 பேர் பரிதாப பலி
டெல்லியில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
டெல்லியில், கரோல் பாக் பகுதியில் அர்பித் பேலஸ் என்ற நட்சத்திர ஓட்டல் உள்ளது. இந்த ஒட்டலில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த தீ அணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
தீ விபத்தில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.