ஆக்சிஜன் தட்டுப்பாடு: 4 நாட்களில் ஒரே மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 74 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கொரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் கோவா மாநிலத்தின் மிகப்பெரிய கொரோனா மருத்துவமனையான கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டினால் கடந்த நான்கு நாட்களில் சிகிச்சை பெற்ற 74 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
அந்த மருத்துவமனையில் கடந்த செவ்வாய் அன்று 26 பேரும், புதன் அன்று 20 பேரும், வியாழன் அன்று 15 பேரும், வெள்ளி அன்று 13 பேர் என மொத்தமாக 74 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாம்பே உயர்நீதிமன்றத்தின் கோவா கிளை நீதிபதிகள் மாநிலத்தில் நோய்வாய்ப்பட்டுள்ள நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளுமாறு எச்சரிக்கை விடுத்ததும் குறிப்பிடத்தக்கது. கோவா மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா தொற்று பாதிப்பு பரிசோதனையில் 48.1 சதவிகிதம் பேருக்கு நோய் தொற்று பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இது நாட்டிலேயே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.