பட்டாசு தொழிற்சாலை கிடங்கில் பயங்கர தீ: 10 பெண்கள் உட்பட 17 பேர் கருகி பலி!
டெல்லியில் பட்டாசு தொழிற்சாலை கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 10 பெண்கள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
டெல்லியில் பவானா தொழிற்பேட்டையில் பட்டாசு தொழிற்சாலை கிடங்கு ஒன்று உள்ளது. இது சட்டவிரோத பட்டாசு கிடங்கு எனக் கூறப்படுகிறது. இந்தக் கிடங்கில் நேற்று இரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், கடும் போராட்டத்துக்கு மத்தியில் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 10 பெண்கள் உட்பட 17 பேர் பலியாயினர். பலர் கடுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பவானா தொழிற்பேட்டையில் நேற்று நடந்த மூன்றாவது தீ விபத்து சம்பவம் இது. மற்ற தீ விபத்துகளில் யாருக்கும் எந்த சேதமும் இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தை அடுத்து இந்த பட்டாசு கிடங்கின் உரிமையாளர் மனோஜ் ஜெயின் கைது செய்யப்பட்டுள்ளார்.