காமன்வெல்த் தூதரானார், 96 வயதில் 98% மார்க் எடுத்த கேரள அம்மா!

காமன்வெல்த் தூதரானார், 96 வயதில் 98% மார்க் எடுத்த கேரள அம்மா!

காமன்வெல்த் தூதரானார், 96 வயதில் 98% மார்க் எடுத்த கேரள அம்மா!
Published on

கேரளாவில் 96 வயதில் 98 சதவீதம் மதிப்பெண் பெற்ற கார்த்தியாயினி அம்மா காமன்வெல்த் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கேரளாவில் 100 சதவீதம் எழுத்தறிவை முழுமை செய்யும் பொருட்டு அம்மாநிலம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ‘அக்‌ஷரலக்ஷம்’ என்ற கல்வியறிவு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் கேரள அரசு தேர்வுகளை நடத்தி வருகிறது. படிப்பைத் தவறவிட்ட முதியவர்களுக்காக நடத்தப்படும் இத்தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் பொருட்டு 2086 மையங்களை கேரள அரசு ஏற்படுத்தியது. இதில், படிக்கும் திறன், எழுதும் திறன் மற்றும் கணித அறிவை சோதிக்கும் வகையில் கேள்விகள் இருக்கும். கேரள கல்வியறிவு திட்டத்தின் கீழ் படிக் கும் மூத்த மாணவியாக, 96 வயது கார்த்தியாயினி அம்மா திகழ்கிறார். தேர்வில் அவர் 98 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார்.

வீட்டின் பொருளாதார சூழல் காரணமாக, கார்த்தியாயின் அம்மா தனது இளம் வயதில் பள்ளிப் படிப்பை கைவிட்டார். கணவர் இளம் வயதிலே மரணமடைந்ததால், தனது 6 குழந்தைகளை வளர்ப்பதற்காக வீட்டு வேலைகள் செய்து வந்த அவர், 60 வயதான தனது மகளிடம் இருந்து படிக் கும் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். அவர் மகள் சில வருடங்களுக்கு முன்புதான், 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார்.

இந்நிலையில் 98 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற, கார்த்திகாயினி அம்மா, கம்ப்யூட்டரை எப்படி இயக்க வேண்டும் என்பதை தெரிந் து கொள்ள ஆவலாக இருப்பதாகக் கூறியிருந்தார். இதையடுத்து கேரள கல்வித்துறை அமைச்சர் சி.ரவீந்திரநாத், அவருக்கு லேப்டாப்பை பரிசாக வழங்கினார். 

இந்நிலையில் கார்த்திகாயினி அம்மாவை கவுரவிக்கும் பொருட்டு காமன்வெல்த் அமைப்பு, கற்றல் நல்லெண்ண தூதராக அவரை நியமித்துள் ளது. காமன்வெல்த் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளில், தொலைதூர கல்வியை மேம்படுத்தும் பொருட்டு, இவரை நல்லெண்ண தூதராக நியமித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com