30 லட்ச ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இந்தியாவுக்கு வருகை

30 லட்ச ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இந்தியாவுக்கு வருகை
30 லட்ச ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இந்தியாவுக்கு வருகை

இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகளை தொடர்ந்து, மூன்றாவதாக ரஷ்யாவின் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி வழக்கத்துக்கு வந்திருக்கிறது. இந்தத் தடுப்பூசி குப்பிகள், இன்று காலை ஐதரபாத்தில் மூன்று மில்லியன், அதாவது 30 லட்சம் தரையிரங்கியுள்ளது. 56.6 டன் எடை மதிக்கத்தக்க இந்த தடுப்பூசிகள், அடுத்தடுத்த நாட்களில் மக்களுக்கு தரப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த தடுப்பூசி, இன்று அதிகாலை 3.40 மணியளவில், தரையிரங்கியது. இவற்றின் சேமைப்பை பொறுத்தவரை, -20 டிகிரி செல்சியஸில் இது பாதுகாக்கப்படவேண்டும். அதன்படி பாதுகாக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. தரையிரங்கி, அடுத்த 90 நிமிடங்களுக்குள் அவை ஐதராபாத்திலுள்ள டாக்டர் ரெட்டிஸ் லேப் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இம்மாத இறுதியில், இது முழுமையான பயன்பாட்டுக்கு வருமென கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் நிலவிவரும் தடுப்பூசி பற்றாக்குறை, இந்த ஸ்புட்னிக் வி மூலமாக தீர்வுகாணும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த தடுப்பூசி, தனியார் மருத்துவமனைகளில் அப்பல்லோ மருத்துவமனையில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு இதன் விலை, ஒரு டோஸ் ரூ.1195 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் போடப்படும் இந்த தடுப்பூசியின் ஒரு டோஸ் விலை ரூ.995 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனுடன் 200 ரூபாய், ஊசி செலுத்தவதற்கான கட்டணம் வைத்து விலை நிர்ணயித்திருக்கிறது அப்பல்லோ நிறுவனம்.

இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து ஒவ்வொரு மாதமும் 4 கோடி தடுப்பூசியை உற்பத்தி செய்யவிருக்கிறது. இந்தியாவில் இந்த ஸ்புட்னிக் வி, கடந்த ஏப்ரல் 12ம் தேதி அனுமதி பெற்றிருந்தது. நேற்றைய தினம் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com