கஞ்சாவை தொலைத்துவிட்டீர்களா ? அசாம் போலீஸின் கிண்டல் ட்வீட்
590 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த அசாம் போலீஸ் போட்ட ட்வீட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அசாம் மாநிலத்தின் துப்ரியில் காவல்துறையினர் 590 கிலோ மதிப்புள்ள கஞ்சா மற்றும் அதை ஏற்றி வந்த லாரியையும் சகோலியா சோதனை சாவடி அருகில் பிடித்தனர். இது யாரையுடையது என்பது தெரியவில்லை. அதனால் அசாம் போலீஸ் ஒரு கேலியான ட்வீட் செய்துள்ளது. அந்த ட்வீட் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
இது தொடர்பாக ட்விட்டரில் அசாம் போலீஸ், “யாராவது 590 கிலோ மதிப்பலான கஞ்சா மற்றும் ஒரு லாரி ஆகியவற்றை சகோலியா சோதனை சாவடி அருகில் தொலைத்துவீட்டீர்களா? அப்படி தொலைத்துவிட்டால் கவலை வேண்டாம். அது பத்திரமாக துப்ரி காவல் நிலையத்தில் உள்ளது. இது தொடர்பாக துப்ரி காவல்துறையினரிடம் தொடர்பு கொள்ளுங்கள்” எனப் பதிவிட்டுள்ளனர்.
இந்த ட்வீட்டிற்கு மக்கள் பலர் கலாய்த்து பதில் ட்வீட்டை பதிவு செய்துள்ளனர். அத்துடன் சிலர் “தயவு செய்து இந்த ட்வீட்டை ரீ ட்வீட் செய்யுங்கள் இதற்கு சம்பந்தமானவரை கண்டுபிடிக்க உதவும்” என கலாய்த்து பதிவிட்டுள்ளனர். மேலும் பலர் துப்ரி காவல்துறையினரின் இந்தச் செயலை பாராட்டியும் ட்வீட் செய்துள்ளனர்.