ராமர் கோயில் கட்டுவதற்கு ரூ.5 லட்சம் நிதி: அஸாம் இஸ்லாம் அமைப்பு

ராமர் கோயில் கட்டுவதற்கு ரூ.5 லட்சம் நிதி: அஸாம் இஸ்லாம் அமைப்பு
ராமர் கோயில் கட்டுவதற்கு ரூ.5 லட்சம் நிதி: அஸாம் இஸ்லாம் அமைப்பு

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ரூ.5 லட்சம் நிதி அளிக்கவுள்ளதாக அஸாம் மாநிலத்தைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்பு தெரிவித்துள்ளது.

70 ஆண்டுகளாக நீடித்து வந்த அயோத்தி நிலம் தொடர்பான விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேபோல், அயோத்தியிலேயே மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்ஃபு வாரியத்திற்கு அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்கு ராமர் கோயில் கட்டுவதற்காக ரூ.5 லட்சம் நிதி வழங்குவதாக 21 இஸ்லாமிய சமுதாயங்களைக் கொண்ட அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், அஸ்ஸாம் சிறுபான்மையினர் வளர்ச்சி வாரியத்தின் தலைவருமான மோமினுல் அவால் செய்தியாளர்களிடம் கூறியபோது "உச்சநீதிமன்றம் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு மூலம் ராமர் கோயில் கட்டுவதற்கான தடைகளைத் தகர்த்துள்ளது. அந்தக் கோயிலைக் கட்டுவதற்காக அமைக்கப்படவுள்ள அறக்கட்டளைக்கு ரூ. 5 லட்சம் நிதி வழங்கப்படும்" என்றார்.

மேலும் அஸாமில் இருக்கும் அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, இந்தத் தீர்ப்பை மதிப்பதாகவும், நாட்டு மக்களும், அஸ்ஸாம் மக்களும் அமைதியை நிலைநாட்டி சமூக வலைதளங்களில் பிரச்னை ஏற்படுத்தக் கூடிய பதிவுகளை பதிவிடக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com