அசாம் கிராம மக்கள் 6 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட விஷயத்தில் அவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.
அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள கிராம மக்கள் 6 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். உல்ஃபா (United Liberation Front of Assam) தீவிரவாதிகள் தான் இந்தக் கொலையை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் கிராம மக்கள் எப்படி சுட்டுக்கொல்லப்பட்டனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி சேகரித்துள்ளது. அதில், “பெங்காலி மொழி பேசிய 6 பேர்கள் சூழ்ந்து கொண்டு கிராம மக்கள் 6 பேரை அங்கிருந்த பாலம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர்களின் பின்னால் இருந்து தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதால் அந்த 6 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்திலிருந்து போலீசார் 38 துப்பாக்கிகளை கைப்பற்றியுள்ளனர்.” இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவத்தை நேரில் பார்த்த மேலும் ஒருவர் கூறும்போது, “ 4 நபர்கள் ஒரு வீட்டின் உள்ளே நுழைந்து அங்கிருந்த இரண்டு ஆண்களை தங்கள் பின்னால் வருமாறு அழைத்துச் சென்றனர். அவர்கள் அசாம் மொழியில்தான் பேசினர். ஒரு சின்ன பேச்சுவார்த்தைக்கு பின் வீடு திரும்பிவிடலாம் எனக் கூறி அழைத்துச் சென்ற அவர்கள் அனைவரும் ராணுவ உடையில்தான் இருந்தனர்.
இதனால் அவர்களை ராணுவ வீரர்கள் என்றே நினைத்தோம். அவர்கள் அழைத்துச் சென்ற சிறிய ரேத்திற்கு பின் வெடி வெடிப்பது போன்று கடுமையான சத்தம் வந்தது. மற்றவர்கள் சென்றுபார்த்தபோது 3 பேர் இறந்த நிலையில் கிடந்தனர். இருவர் கடுமையான ரத்த வெள்ளத்தில் ஒருவர் படுகாயடத்துடனும் இருந்தார். இதில் மூன்று பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 6 பேரும் உயிரிழந்தனர்” எனக் கூறியுள்ளார்.