கொரோனாவை தொடர்ந்து இந்தியாவுக்குள் பரவும் அடுத்த வைரஸ் ?

கொரோனாவை தொடர்ந்து இந்தியாவுக்குள் பரவும் அடுத்த வைரஸ் ?

கொரோனாவை தொடர்ந்து இந்தியாவுக்குள் பரவும் அடுத்த வைரஸ் ?
Published on

ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

கொரோனாவை போல இந்த காய்ச்சலுக்கும் இதுவரை தடுப்பு மருந்து உருவாக்கப்படவில்லை. 

‘ஆப்பிரிக்கன் ஸ்வைன் ப்ளூ’ என சொல்லப்படும் இந்த காய்ச்சல் நோய் சீனாவிலிருந்து வடகிழக்கு இந்தியாவுக்குள் பரவியிருக்கலாம் என அசாம் மாநில அரசு சந்தேகப்படுகிறது.

கொரோனவை விட இது ஆபத்தான நோய். ஏனெனில் இந்நோயின் இறப்பு விகிதம் 90 முதல் 100 சதவீதம். இது மனிதர்களை தாக்கும் என்பதற்கு இதுவரையில் அறிவியல் பூர்வாமன ஆதாரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இது பன்றிகளை மட்டுமே தாக்குகின்ற நோய் என அசாம் அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரியில் இந்த நோய் பரவல் தொடங்கியுள்ளது. பக்கத்து மாநிலமான அருணாச்சல பிரதேசத்திலிருந்து நீர் நிலைகளின் வழியாக இறந்து போன பன்றிகளின் உடல்கள் அசாம் மாநிலத்திற்குள் வந்துள்ளன.அருணாச்சல பிரதேச அரசு சார்பில் மக்கள் பன்றி இறைச்சியை உட்கொள்ளும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இருந்தாலும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால் இதுவரை 17,277 பன்றிகள் அசாமில் பாதிக்கப்பட்டுள்ளன.

அசாம் மாநில கால்நடை துறை அமைச்சர் அத்துல் போரா தெரிவித்தது ‘இதுவரை மாநிலத்தின் 10 மாவட்டங்களில் இந்த நோய் பரவல் அடையாளம் காணப்பட்டுள்ளன. அருணாச்சல பிரதேசத்தின் எல்லைப் பகுதியில் உள்ள சீனாவின் மாகாணங்களில் இருந்து இந்த நோய் பரவி இருக்கலாம் என வலுவாக சந்தேகிக்கிறோம்’ என சொல்லியுள்ளார்.   

இந்த நோய் பரவலை தடுப்பதற்கான ஒரே வழி பன்றி மற்றும் அதன் இறைச்சி விற்பனைக்கு மாநிலத்தில் தடை விதிப்பது தான் தீர்வாக இருக்கும். தற்போது அசாம் மிக மோசமான வெள்ளத்தை எதிர்த்துப் போராடி வருகிறது.  மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்கள்  வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. வெள்ள பாதிப்பு இல்லாத பகுதிகளில் தான் இந்த தடையை போட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com