இந்தியா
வெள்ளத்தால் உருக்குலைந்த அஸ்ஸாம்: வனவிலங்குகள் தத்தளிப்பு
வெள்ளத்தால் உருக்குலைந்த அஸ்ஸாம்: வனவிலங்குகள் தத்தளிப்பு
வெள்ளத்தால் அஸ்ஸாம் மாநிலம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. 23 மாவட்டங்களில், 15 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடுமையான வெள்ளத்தால், புகழ்பெற்ற காசிரங்கா தேசியப் பூங்கா 73 சதவிகித அளவுக்கு பாதிக்கப்பட்டிருப்பதாகவும், சில விலங்குகள் உயிரிழந்துவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

