Assam Election Results BJP Nears Victory Himanta Sarma in Lead
Himanta & Gaurav Gogoiweb

#AssamElectionResults | அசாம் வெற்றியை தொடும் பாஜக.. ஹிமந்த சர்மா முன்னிலை

அஸ்ஸாமில் 100 இடங்களை நெருங்குகிறது பாஜக . ஜோர்ஹாட் தொகுதியில் கௌரவ் கோகோய் பின்னடைவு.
Published on

126 தொகுதிகள் கொண்ட அசாமுக்கு ஏப்ரல் 9ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. ஆட்சியமைக்க 64 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்கிற நிலையில், தற்போதைய நிலவரம் குறித்து அறியலாம். அம்மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க முயலும் நிலையில் 100 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 26 தொகுதியில் முன்னிலை வகிக்க்கிறது. ஜலுக்பாரியில் ஹிமந்த சர்மா முன்னிலையில் உள்ளார். ஜோர்ஹாட்டில் ஹிதேந்திர நாத் கோஸ்வாமிக்கு எதிராக போட்டியிடும் கவுரவ் கோகோய் பின்தங்கியுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com