விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 127 ஆக உயர்வு
அசாமில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது.
அசாம் மாநிலம் கோலகாட் மாவட்டத்தின் ஜோர்ஹட் பகுதியிலுள்ள டீ தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கூட்டாக சென்று நாட்டுச் சாராயம் குடித்துள்ளனர். விலை குறைவான அந்தச் சாராயத்தில் நச்சுத்தன்மை அதிகம் இருந்ததால் அதைக் குடித்த தொழிலாளர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். முதலில் 30 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், இதில் உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை நேற்று 114 ஆக உயர்ந்திருந்தது. இந்த உயிரிழப்பு இப்போது 127 ஆக அதிக ரித்துள்ளது. இந்த சம்பவம் அசாம் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சோக சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள அசாம் அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.