அசாம் | அடுத்த முதல்வர் யார்? தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்!
தமிழ்நாடு, கேரளா, அசாம், புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்குச் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வாக்குப்பதிவும் முடிந்துள்ளது. இதில், அசாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. அசாமைப் பொறுத்தவரை ஆட்சியமைக்க ஒரு கட்சிக்கு, 64 இடங்களை தேவை. இந்த நிலையில், அசாமில் அடுத்து ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என இங்கு தெரிந்துகொள்வோம்.
ஆக்சிஸ் மை இந்தியா
பாஜக கூட்டணி : 88 - 100
காங்கிரஸ் கூட்டணி : 24 - 36
மற்றவை : 0
மேட்ரிஜ்
பாஜக கூட்டணி : 85 - 95
காங்கிரஸ் கூட்டணி : 25 - 32
மற்றவை : 6 -12
பீப்பில்ஸ் பல்ஸ்
பாஜக கூட்டணி : 68 - 72
காங்கிரஸ் கூட்டணி : 22 - 26
மற்றவை : 7 - 15
பீப்பிள்ஸ் இன்சைட்
பாஜக கூட்டணி : 88 - 96
காங்கிரஸ் கூட்டணி : 30 - 34
மற்றவை : 2 - 4
போல் டைரி
பாஜக கூட்டணி : 86 - 101
காங்கிரஸ் கூட்டணி : 15 - 26
மற்றவை : 0
ஜேவிசி
பாஜக கூட்டணி : 88 - 101
காங்கிரஸ் கூட்டணி : 23 - 33
மற்றவை : 2 - 5

