இந்தியா
அசாமிலும் ப்ளூவேல் பயங்கரம்?: படுகாயங்களுடன் மாணவனுக்கு சிகிச்சை
அசாமிலும் ப்ளூவேல் பயங்கரம்?: படுகாயங்களுடன் மாணவனுக்கு சிகிச்சை
அசாம் மாநிலத்தில் ப்ளூவேல் விளையாட்டிற்கு ஒரு மாணவன் அடிமையாகி தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
கவுகாத்தி அரசு மருத்துவமனையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவில் 10 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மகனின் நடத்தை கடந்த சில நாட்களாகவே வித்தியாசமாக இருந்ததாகவும் அவன் மொபைல் ஃபோனில் விளையாட்டு ஒன்றுக்கு அடிமையாக இருந்ததாகவும் பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் மாணவனின் காயத்துக்கு புளூவேல் காரணமாக இருக்குமா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். எனவே சிறுவர்களின் பெற்றோர், குறிப்பாக 13 முதல் 19 வயது வரையுள்ள பதின்ம வயதினரின் பெற்றோர் மிகவும் விழிப்பாக இருக்குமாறு போலீசார் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.