5 பேரை மிதித்துக்கொன்ற அசாம் காட்டு யானை உயிரிழப்பு

5 பேரை மிதித்துக்கொன்ற அசாம் காட்டு யானை உயிரிழப்பு

5 பேரை மிதித்துக்கொன்ற அசாம் காட்டு யானை உயிரிழப்பு
Published on

அசாம் மாநிலத்தில் 5 பேரைக் கொன்ற 35 வயது காட்டு யானை உயிரிழந்தது.

கோல்பாரா பகுதியில் மக்களை அச்சுறுத்தி வந்த லேடன் என்ற காட்டு யானை, அப்பகுதி மக்கள் 5 பேரை மிதித்துக் கொன்றது. இதனையடுத்து காட்டு யானையைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சிகளை‌ மேற்கொண்டனர். ஆளில்லா விமானம் மூலம்‌ தொடர்ந்து கண்காணித்து வந்த வனத்துறையினர், ‌அந்த யானையை கடந்த 11 ஆம் தேதி மயக்க ஊசி செலுத்திப் பிடித்து, அதனை ஓரங் தேசிய பூங்காவில் ஒப்படைத்தனர். 

இந்நிலையில் யானை லேடன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது. பூங்கா நிர்வாகிகள் மற்றும் வனத்துறையினர் லேடனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com