இந்தியா
தொடரும் ப்ளூவேல் விபரீதம்: மாடியிலிருந்து குதித்த கல்லூரி மாணவன்
தொடரும் ப்ளூவேல் விபரீதம்: மாடியிலிருந்து குதித்த கல்லூரி மாணவன்
அசாமில் ப்ளூவேல் விளையாட்டை விளையாடிய கல்லூரி மாணவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
உலகம் முழுவதும் பரவியுள்ள ப்ளூவேல் கேம் பலரின் உயிரை பறித்து வருகிறது. இந்த ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இளைஞர்களும், சிறுவர்களும் இந்த விளையாட்டின் பிடியில் சிக்கிக்கொள்ளும் அவலம் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.
இந்நிலையில், அசாமின் சில்சார் பகுதியில் உள்ள கல்லூரி மாணவர் ஒருவர் ப்ளூவேல் விளையாட்டை தொடர்ந்து விளையாடி வந்துள்ளார். அவர், இன்று மாடியிலிருந்து இருந்து கீழே விழுந்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் படுகாயமடைந்த அந்த மாணவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.