இந்தியா
அசாம்: பாஜக கூட்டணியிலிருந்து, காங். கூட்டணிக்கு தாவிய போடோலாந்து மக்கள் முன்னணி
அசாம்: பாஜக கூட்டணியிலிருந்து, காங். கூட்டணிக்கு தாவிய போடோலாந்து மக்கள் முன்னணி
அசாமில் அடுத்தமாதம் தேர்தல் நடக்க உள்ள நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து போடோலாந்து மக்கள் முன்னணி கட்சி விலகி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணைந்தது.
அசாம் அரசியலில் அதிரடி திருப்பமாக, சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் போடோலாந்து மக்கள் முன்னணி கட்சி, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகி, காங்கிரஸ் கூட்டணியில் இணைந்துள்ளது. போடோலாந்து மக்கள் முன்னணி தற்போதைய அசாம் மாநில பாஜக அரசிலும், அமைச்சரவையிலும் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது