சிஏஏவுக்கு எதிராக சமூ‌க வலைதளங்களில் பதிவு - 16 பேர் கைது

சிஏஏவுக்கு எதிராக சமூ‌க வலைதளங்களில் பதிவு - 16 பேர் கைது
சிஏஏவுக்கு எதிராக சமூ‌க வலைதளங்களில் பதிவு - 16 பேர் கைது

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவு செய்த 16 பேரை அசாம் காவல்துறை கைது செய்துள்ளது.

சமூக வலைதளங்களில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக 246 பதிவுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அசாம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ‌மாநிலம் முழுவதும் 3‌6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் வன்முறையை தூண்டும் விதமாக பதிவிடப்பட்டுள்ள கருத்துகளை நீக்குமாறு சம்பந்தப்பட்ட‌வர்களுக்கு அறிவுறுத்தியிருப்பதாகவும் அசாம் காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com