ஆந்திரா | “இன்னொரு குழந்தை வேண்டும்” - இரு மனைவிகள் உதவியோடு மூன்றாவது திருமணம் செய்த நபர்!

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் அல்லூரி சீதாராம ராஜு என்ற மாவட்டம் உள்ளது. இங்குள்ள பின்தங்கிய ஒரு கிராமத்தில் கடந்த மாதம் 25ம் தேதி திருமணம் ஒன்று நடந்துள்ளது. அது தற்போது இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. அப்படி அங்கு என்ன நடந்தது? பார்க்கலாம்...
இரு மனைவிகள் உதவியோடு மூன்றாவது திருமணம் செய்த நபர்
இரு மனைவிகள் உதவியோடு மூன்றாவது திருமணம் செய்த நபர்ட்விட்டர்

ஆந்திராவின் அல்லூரி சீதாராம ராஜூ (ASR) என்ற மாவட்டத்திலுள்ள கிஞ்சுரு என்ற கிராமத்தில் பண்டனா என்றொருவர் இருந்திருக்கிறார். இவரது முதல் மனைவி, சகேனி பர்வத்தமா. இவர்களுக்கு கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் ஆகியிருக்கிறது. தற்போது வரை குழந்தையில்லை.

திருமணம்
திருமணம்pt web

இந்நிலையில் சகேனியுடன் தனக்கு திருமணமானதை மறைத்த பண்டனா, குழந்தை பெறும் நோக்கில் வேறொரு பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். அவர் பெயர் சகேனி அப்பலம்மா. இந்தத் திருமணம் 2005-ல் நடந்த நிலையில், இவர்களுக்கு 2007-ல் குழந்தை பிறந்திருக்கிறது. இதன்பின் பண்டனா தன் 2 மனைவிகள், ஒரு மகனுடன் ஒரே வீட்டில் இருந்திருக்கிறார்.

இரு மனைவிகள் உதவியோடு மூன்றாவது திருமணம் செய்த நபர்
பொதுத்துறை வங்கி பணிகளுக்கான ஐபிபிஎஸ் தேர்வு தேதிகள் அறிவிப்பு!

இந்நிலையில், அடுத்த குழந்தைக்கு தயாராகியிருக்கிறார் பண்டனா. ஆனால் 2 மனைவிகளும் அதன்பின் கருவுறவில்லையாம். இதனால் தற்போது இரு மனைவிகளின் சம்மதத்துடன் மூன்றாவது திருமணம் செய்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார். இந்த மூன்றாவது திருமணத்துக்கு, முதல் இரு மனைவிகளே ஏற்பாடுகளை செய்துள்ளனர் என்பது இன்னும் அதிர்ச்சி.

இரு மனைவிகள் உதவியோடு மூன்றாவது திருமணம் செய்த நபர்
இரு மனைவிகள் உதவியோடு மூன்றாவது திருமணம் செய்த நபர்

திருமண பத்திரிகைகளிலும் தங்கள் பெயர்களை போட்டு வரவேற்துள்ளனர் அந்த மனைவிகள். கூடவே மணமகன் - மணமகளென தங்கள் கணவர் மற்றும் அந்த மூன்றாவது பெண்ணின் புகைப்படத்துடன் பேனர் அடித்து, அதில் தங்கள் புகைப்படத்தை கீழே போட்டுள்ளனர்.

இவையாவும் அந்த ஊரிலேவும் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய போதும், மூன்றாவது திருமணத்தை செய்துள்ளார் பண்டனா. தற்போது மூன்று மனைவிகளுடனும் அவர் ஒரே வீட்டில் வாழ்வதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன

இரு மனைவிகள் உதவியோடு மூன்றாவது திருமணம் செய்த நபர்
குற்றவியல் சட்டங்கள்.. பழைய சட்டம் VS புதிய சட்டம்.. முழு விவரம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com