மகாராஷ்டிரா: வாடகை கேட்ட கடை ஓனர்! 30 நண்பர்களுடன் சென்று தாக்குதல் நடத்திய வாடகைதாரர்!

மகாராஷ்டிரா: வாடகை கேட்ட கடை ஓனர்! 30 நண்பர்களுடன் சென்று தாக்குதல் நடத்திய வாடகைதாரர்!
மகாராஷ்டிரா: வாடகை கேட்ட கடை ஓனர்! 30 நண்பர்களுடன் சென்று தாக்குதல் நடத்திய வாடகைதாரர்!

மகாராஷ்டிராவில் வாடகை கேட்ட கடை உரிமையாளரை, வாடகைதாரர் ஒருவர் தனது 30 நண்பர்களுடன் சென்று கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் தானேவில் உள்ள விடல்வாடி பகுதியில் இயங்கி வந்த ‘ஆஷா சோப்ஸ்’ என்ற கடையின் உரிமையாளர் முகேஷ் வாத்வா. இவர் இந்த கடையை சஞ்சய் குப்தா என்ற நபருக்கு குத்தகைக்கு விட்டிருந்தார். ஆனால் சஞ்சய் குப்தா சரியான நேரத்திற்கு வாடகை தராமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கடை வாடகைய செலுத்தாது குறித்து உரிமையாளர் முகேஷ், சஞ்சயிடம் கேள்வி எழுப்பத் துவங்கியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய் தனது முப்பது நண்பர்களை திரட்டிக் கொண்டு முகேஷின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு முகேஷ் மீது கொலைவெறி தாக்குதலை அரங்கேற்றியுள்ளது சஞ்சயின் கும்பல். மேலும் முகேஷின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி அங்கிருந்து சென்றிருக்கிறார் சஞ்சய்.

இந்த தாக்குதலில் முகேஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து சஞ்சய் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என விட்டல்வாடி காவல் நிலைய மூத்த காவல் ஆய்வாளர் சஞ்சய் கெய்க்வாட் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com