இந்தியா
ரஃபேல் போர் விமானம் விவகாரம்: பிரதமர் மீது ராகுல் புகார்
ரஃபேல் போர் விமானம் விவகாரம்: பிரதமர் மீது ராகுல் புகார்
பெரு வணிகர் ஒருவருக்கு சாதகமாக ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை பிரதமர் மோடி மாற்றியமைத்ததாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடியிடம் யாரும் கேள்வி எழுப்பாதது ஏன்? என்றும் ராகுல் வினவினார். வான்வெளித்துறையில் அனுபவம் இல்லாத ஒரு நிறுவனத்துக்கு சாதகமாக பிரதமர் நடந்து கொண்டிருப்பதாக ராகுல் கூறினார்.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத், பாரதிய ஜனதா ஆட்சியில் ஊழலை கண்டுபிடிக்க முடியாத ராகுல் அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதாகத் தெரிவித்தார்.

