இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டி - இந்தியாவுக்கு முதல் தங்கமும் வெள்ளியும் !
ஆசிய விளையாட்டுப் போட்டி - இந்தியாவுக்கு முதல் தங்கமும் வெள்ளியும் !
இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் 18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு மல்யுத்தப் போட்டியின் வாயிலாக முதல் தங்கம் கிடைத்துள்ளது. ஆடவர் 65 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கம் வென்றார். அவர் இறுதிப் போட்டியில் ஜப்பான் வீரர் தகதானி டைய்ச்சியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார்.
வெற்றி பெற்ற பஜ்ரங் புனியாவுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், வீரர் பஜ்ரங் புனியாவுக்கு ஹரியானா மாநில அரசு 3 கோடி ரூபாய் பரிசுத்தொகையையும் அறிவித்துள்ளது.
அதேபோல், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் தீபக் குமார் சில்வர் பதக்கம் வென்றுள்ளார். ஆண்களுக்கான 10மீ பிரிவில் அவர் இந்த பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளார்.