\
சமூக நல்லிணக்கதிற்கு எதிராக பேசியதாக புகார்: ஓவைசி மீது உ.பி. போலீசார் வழக்குப்பதிவு

சமூக நல்லிணக்கதிற்கு எதிராக பேசியதாக புகார்: ஓவைசி மீது உ.பி. போலீசார் வழக்குப்பதிவு

சமூக நல்லிணக்கதிற்கு எதிராக பேசியதாக புகார்: ஓவைசி மீது உ.பி. போலீசார் வழக்குப்பதிவு
Published on: 
சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக பேசியதாக ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன் உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கியில் நடைபெற்ற பேரணியில் பேசிய அசாதுதீன் ஓவைசி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறாகவும், ஒரு சமூகத்தின் உணர்வுகளை தூண்டும் வகையில் சமூக நல்லிணக்கதிற்கு எதிராக பேசியதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஓவைசி மீது பாரபங்கி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com