டெல்லியில் தொடங்கியது பனிக்காலம் - இன்று காலை 9℃ ஆக வெப்பநிலை பதிவு

டெல்லியில் தொடங்கியது பனிக்காலம் - இன்று காலை 9℃ ஆக வெப்பநிலை பதிவு
டெல்லியில் தொடங்கியது பனிக்காலம் - இன்று காலை 9℃ ஆக வெப்பநிலை பதிவு

டெல்லியில் குளிர் காலம் தொடங்கிய நிலையில் இன்று காலை 9℃ ஆக வெப்பநிலை பதிவாகியுள்ளது.

டெல்லியில் பொதுவாக அக்டோபர் மாதம் வெயிலின் தாக்கம் குறைந்து நவம்பர் மாதங்களில் குளிர்காலம் உச்சத்துக்கு செல்ல தொடங்கும் கடந்த சில வாரங்களாகவே வெப்பநிலை குறைந்து வந்த நிலையில்  இன்று டெல்லியில்  9℃ ஆக வெப்பநிலை பதிவாகியுள்ளது.  வழக்கமாக டிசம்பர்-பிப்ரவரி முதல் வரை கடும் குளிர் நீடிக்கும் நிலையில், இந்த ஆண்டு நவம்பர் மாதத்திலே குளிர் அதிகரித்து காணப்படுகிறது.

இது இந்த பருவத்திற்கான குறைந்த பட்ச பருவநிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் வரும் நாட்களில் மேலும் படிப்படியாக குளிர் அதிகரித்து 2℃-4℃ வரை குளிர் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் குளிர் காரணமாக டெல்லி வாசிகள், தங்களை தற்காத்துக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com