18 வயது நிரம்பியவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான முன்பதிவில் சிக்கல்

18 வயது நிரம்பியவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான முன்பதிவில் சிக்கல்

18 வயது நிரம்பியவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான முன்பதிவில் சிக்கல்
Published on

18 வயது நிரம்பியவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், அதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

18 முதல் 45 வயதுக்கு உட்பட்டோர் மே 1 ஆம் தேதி முதல் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான முன்பதிவு மாலை 4 மணிக்கு தொடங்கியது. அதனைத் தொடர்ந்து முன்பதிவு செய்வதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. முன்பதிவு செய்ய முயன்ற பலருக்கும் OTP எண் தாமதமாக வருகிறது என்றும், பல இடங்களில் கோவின் இணையதளமே செயல்படாமல் முடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

பலரும் ஒரே நேரத்தில் பதிவு செய்ய முற்பட்டதால் முன்பதிவில் சிக்கல் இருப்பதாக தெரிகிறது. அதே போல் முன்பதிவு செய்தவர்களுக்கு இடம், நேரம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும் பலரும் புகார் தெரிவித்தனர். 

இந்நிலையில், புகார் தொடர்பாக ஆரோக்ய சேது செயலி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அரசு, தனியார் மையங்கள் தடுப்பூசிக்கான இடம் மற்றும் நேரப் பட்டியலை தயாரித்த பிறகே முன் பதிவு செய்தோருக்கு ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com