`சும்மா ஃபோட்டோ எடுக்க ஏறினேன் சார்; கதவ தொறங்க ப்ளீஸ்’- வந்தே பாரத் ரயிலில் புலம்பிய நபர்

`சும்மா ஃபோட்டோ எடுக்க ஏறினேன் சார்; கதவ தொறங்க ப்ளீஸ்’- வந்தே பாரத் ரயிலில் புலம்பிய நபர்

`சும்மா ஃபோட்டோ எடுக்க ஏறினேன் சார்; கதவ தொறங்க ப்ளீஸ்’- வந்தே பாரத் ரயிலில் புலம்பிய நபர்

போட்டோ எடுப்பதற்காக வந்தே பாரத் ரெயிலில் ஏறி விஜயவாடா வரை பயணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் ஆந்திராவை சேர்ந்த ஒருவர்.

ஆந்திர மாநிலம் ராஜமகேந்திரவரம் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலில் உள்ள வசதிகளை படம் எடுப்பதற்காக 40-45 வயதையொட்டிய ஒருவர் ஏறியிருக்கிறார். அவர் ரயிலில் ஏரிய சில நொடிகளில் கதவு அடைக்கப்பட்டு ரயில் புறப்பட்டு விட்டது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த அவர் டிடி-யிடம் சென்று `கதவை திறந்து என்னை இறக்கி விடுங்கள்’ என்று கேட்டிருக்கிறார்.

டிடி தரப்பில், “இந்த ரயிலில் அதுபோல் செய்ய இயலாது. இனி அடுத்து ரயில்நிலையம் வரும் ஸ்டாப்பிங்கில் மட்டுமே இறங்க முடியும். அந்த வகையில் இந்த ரயில் அடுத்து விஜயவாடாவில் நிற்கும். அங்கே இறங்கிக் கொள்ளுங்கள். அதற்கு முன் டிக்கெட் இல்லாமல் ரயில் ஏறிய காரணத்திற்காக, டிக்கெட் தொகையுடன் அபராதத்தையும் செலுத்துங்கள்” என்று கூறியுள்ளார்.

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">The uncle boarded the Vande Bharat train at Rajamundry station to take a photo from inside, forgetting to get off the train. The automatic system locked the doors as soon as the train started moving. The TC says the next station is Vijayawada. <br> <a href="https://t.co/dhfJ73LKkp">pic.twitter.com/dhfJ73LKkp</a></p>&mdash; Dal Baati Churma Rajasthani Surma (@Dal_Bati_Curma) <a href="https://twitter.com/Dal_Bati_Curma/status/1615403237607354369?ref_src=twsrc%5Etfw">January 17, 2023</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் டிடியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் டிடி, “ரயில்வே சட்டப்படி உங்கள் வாக்குவாதம் எடுபடாது. எனவே நீங்கள் விஜயவாடா வரை பயணம் செய்தே ஆக வேண்டும். இடையில் ரயில் நிற்காது. கதவையும் நான் திறக்க இயலாது. கதவின் முழு கட்டுப்பாடு அனைத்தும் ரயில் டிரைவரிடம் இருக்கும்” என்று கூறிவிட்டார்.

எனவே வேறு வழியில்லாமல் அந்த நபர் விஜயவாடா வரை பயணம் செய்துள்ளார். தெரியாமல் நடந்த அந்த தவறுக்காக அந்த நபரை ரயில்வே அதிகாரிகள் எச்சரித்து ரயிலில் இருந்து இறங்கி செல்ல அனுமதித்தனர். கிட்டத்தட்ட 150 கி.மீக்கும் மேலாக, சுமார் 6 மணி நேரம் கூடுதலாக அவர் பயணம் செய்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com