‘பழிக்குப் பழி?’ : 250-க்கும் மேற்பட்ட நாய்க்குட்டிகளை கொன்ற குரங்குகள்!

‘பழிக்குப் பழி?’ : 250-க்கும் மேற்பட்ட நாய்க்குட்டிகளை கொன்ற குரங்குகள்!
‘பழிக்குப் பழி?’ : 250-க்கும் மேற்பட்ட நாய்க்குட்டிகளை கொன்ற குரங்குகள்!

வழக்கமாக விலங்குகள் வேட்டையாடி தனது உணவை உண்ட கதையைதான் நாம் அறிந்திருப்போம். ஆனால் சுமார் 250-க்கும் மேற்பட்ட நாய்க்குட்டிகளை ‘குரங்கு’ கூட்டம் ஒன்று கொன்றுள்ளன. இதனை பழிக்குப் பழி நடவடிக்கையாக குரங்குகள் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பீடு மாவட்டத்தில் நடந்துள்ளது. 

கடந்த மாதம் முதலே இந்த சம்பவத்தை ஒரு குறிப்பிட்ட குரங்கு கூட்டம் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. நாய் குட்டிகளை பற்றிக் கொண்டு உயரமான கட்டடம் அல்லது மரத்தின் மீது ஏறி, அங்கிருந்து நாய் குட்டிகளை கீழ் விட்டு அதனை கொன்று வருகிறதாம் குரங்குகள். 

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல நாய்கள் அடங்கிய கூட்டம் குரங்கு குட்டி ஒன்றை கடித்ததில் உயிரிழந்துள்ளது. அதனால் அந்த சம்பவத்துக்கு பழிக்குப் பழிவாங்கும் நோக்கில் இதனை குரங்குகள் செய்து வருவதாக சம்பவத்தை கண்ணால் பார்த்த உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். 

குரங்குகளின் அட்டகாசம் குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் சொல்லியும் அதற்கு தகுந்த நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதுவரை ஒரு குரங்கை கூட வனத்துறை பிடிக்கவில்லையாம்.  

புகைப்படம் : கோப்புப்படம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com