\
ஆம்புலன்ஸ் வர தாமதம்: நெடுஞ்சாலையில் குழந்தை பெற்ற பெண்!

ஆம்புலன்ஸ் வர தாமதம்: நெடுஞ்சாலையில் குழந்தை பெற்ற பெண்!

ஆம்புலன்ஸ் வர தாமதம்: நெடுஞ்சாலையில் குழந்தை பெற்ற பெண்!
Published on: 

ஆம்புலன்ஸ் சரியான நேரத்தில் வராததால் கர்ப்பிணி ஒருவர் நெடுஞ்சாலையிலேயே குழந்தை பெற்றார்

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கம்லா பாய் என்ற கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு தகவல் கொடுத்த அவரது கணவர் ஆம்புலன்ஸுக்காக காத்திருந்துள்ளார். ஆனால் ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வைத்தே மருத்துவமனை நோக்கி சென்றுள்ளார். 

ஆனால் கடைசி வரை ஆம்புலன்ஸ் வரவே இல்லை. ஆனால் பிரசவ வலி அதிகமானதால் செல்லும் வழியான நெடுஞ்சாலையிலேயே குழந்தையை பெற்றெடுத்தார் கம்லா பாய். பிறகு தாயும் சேயும் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து பேசிய செவிலியர்,  நெடுஞ்சாலையிலேயே குழந்தை பிறந்துவிட்டதாக கையில் குழந்தையுடன் கம்லாபாயும் அவரது உறவினர்களும் வந்தனர். உடனடியாக தாயையும், சேயையும் அனுமதித்து சிகிச்சை அளித்தோம். தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர் என தெரிவித்துள்ளார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com