ஆர்யன் கான் தாக்கல் செய்த ஜாமீன் மனு - 3வது நாளாக இன்றும் விசாரணை

ஆர்யன் கான் தாக்கல் செய்த ஜாமீன் மனு - 3வது நாளாக இன்றும் விசாரணை

ஆர்யன் கான் தாக்கல் செய்த ஜாமீன் மனு - 3வது நாளாக இன்றும் விசாரணை
Published on

போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை மூன்றாவது நாளாக இன்றும் தொடரவுள்ளது.

ஆர்யன் கான் ஜாமீன் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், அவர் தரப்பில் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் முகுல் ரோஹத்கி ஆஜராகி இரண்டாவது நாளாக தனது வாதத்தை முன் வைத்தார்.

இரண்டு மணி நேரமாக வாதங்கள் நீடித்த நிலையில் வியாழக்கிழமை இதுபற்றி முடிவெடுக்கப்படும் என நீதிபதி அறிவித்தார். இதையடுத்து மூன்றாவது நாளாக ஜாமீன் மனு மீதான விசாரணை இன்றும் தொடரவுள்ளது. போதை பொருள் தடுப்பு முகமை சார்பில் வாதங்கள் முன்வைக்கப்படவுள்ளன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com