மு.க.ஸ்டாலினுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து : பினராயி, மம்தாவுக்கும் வாழ்த்து..!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தில் பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் “ தமிழக சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றிபெற்ற மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். தமிழக மக்களின் விருப்பத்தை பூர்த்திசெய்ய மனமார்ந்த வாழ்த்துகள்” என தெவித்திருக்கிறார்.
மேற்கு வங்கத்தில் பெரும்பான்மையை பெற்றிருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தாவுக்கு வாழ்த்து தெரிவித்த அவர் “ மிகப்பெரிய வெற்றியை பெற்ற மம்தாவுக்கு வாழ்த்துகள். என்னவொரு போட்டி, மேற்குவங்க மக்களுக்கு வாழ்த்துகள்” என தெரிவித்தார். கேரளாவில் பெரும்பான்மை பெற்றுள்ள சிபிஎம் தலைவர் பினராயி விஜயனுக்கு, கெஜ்ரிவால் தெரிவித்த வாழ்த்து செய்தியில் “ பினராயி விஜயனுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். நல்லாட்சிக்கான அங்கீகாரத்தை கேரள மக்கள் தந்துள்ளனர்” என தெரிவித்தார்.