“அரசின் பாசாங்குத்தனம் அம்பலமாகிவிடும்” - ட்ரோல் ஆகும் கெஜ்ரிவாலின் பழைய ட்வீட்

“அரசின் பாசாங்குத்தனம் அம்பலமாகிவிடும்” - ட்ரோல் ஆகும் கெஜ்ரிவாலின் பழைய ட்வீட்

“அரசின் பாசாங்குத்தனம் அம்பலமாகிவிடும்” - ட்ரோல் ஆகும் கெஜ்ரிவாலின் பழைய ட்வீட்
Published on


கனையா குமார் மீது தேசத்துரோக வழக்கு தொடர டெல்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளதற்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து
வருகின்றனர்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கனையா குமார் மீது தேசத்துரோக வழக்கு தொடர டெல்லி அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. கனையாகுமார் மீது தேசத்துரோக பேச்சு குறித்த குற்றச்சாட்டு 4 ஆண்டுகளாக உள்ள நிலையில் அதன் மீது நடவடிக்கை எடுக்க கெஜ்ரிவால் அரசு முட்டுக்கட்டையாக இருப்பதாக பாஜக குற்றஞ்சாட்டியிருந்தது.

இந்நிலையில் டெல்லி அரசு வழக்குத் தொடர பச்சைக்கொடி காட்டியுள்ளது. இதை டெல்லி பா‌ஜக தலைவர் வரவேற்றுள்ளார். ஆனால் அரவிந்த்
கெஜ்ரிவாலின் இந்த நடவடிக்கைக்கு நெட்டிசன்களிடம் இருந்தும் பிரபலங்களிடம் இருந்தும் எதிர்வினை எழுந்துள்ளது. பாலிவுட் இயக்குநர் ஒனிர்
(Onir) டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் செயலை விமர்சித்துள்ளார். இது குறித்து ஒனிர் ட்வீட் செய்துள்ளார். அது சமூக ஊடகங்களில்
மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் அவரது ட்வீட்டிற்கு சமூகவலைத்தள வாசிகள் பலரும் பதிலளித்து வருகின்றனர்.

மேலும் இயக்குநர் ஒனிர், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 2016 ஆம் ஆண்டு கன்னைய குமாரின் பேச்சை ஆதரித்து வெளியிட்ட பழைய ட்வீட்டை
ஸ்கிரீன் ஷாட்டை எடுத்து பகிர்ந்து கொண்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் அந்தப் பழைய ட்வீட்டில், “இவ்வளவு சிறப்பாகக் கன்னையா குமார் பேசி
இருக்கிறார்”என்று பாராட்டியுள்ளார்.

அந்த ட்வீட்டின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்த பாலிவுட் இயக்குநர் ஒனிர், “அரவிந்த் கெஜ்ரிவால் செயல் மிகவும் ஏமாற்றமளிக்கிறது. அரசாங்கத்தின்
பாசாங்குத்தனம் அம்பலமாகிவிடும்” எனக் கூறியுள்ளார். ஒனிர் வெளியிட்டுள்ள இந்த ட்வீட்டில் நெட்டிசன் நிறைய பேர் பதிலளித்து வருகின்றனர்.
கன்னையா குமார் மீது தேசத்துரோக வழக்குத் தொடரப்பட்ட பின்னர், பிரபலங்கள் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலை குறிவைத்து விமர்சித்து
வருகின்றனர். இதனிடையே கன்னைய குமாரின் ட்வீட்டை பகிர்ந்துள்ள பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் கருத்து கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com