இந்தியா
“சிங்கப்பூருக்கான விமான சேவையை இந்தியா ரத்து செய்ய வேண்டும்” - அரவிந்த் கெஜ்ரிவால்
“சிங்கப்பூருக்கான விமான சேவையை இந்தியா ரத்து செய்ய வேண்டும்” - அரவிந்த் கெஜ்ரிவால்
சிங்கப்பூருக்கு விமான சேவையை ரத்துசெய்ய வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தால் முதியவர், இணைநோய் அல்லாதோர் மட்டுமல்லாமல் இளம்வயதினர் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நோயின் தீவிரம் கருதி பல நாடுகள் இந்தியாவிற்கான விமான போக்குவரத்து சேவையை ரத்து செய்துள்ளது. தற்போது இந்தியாவிலும் குழந்தைகளிடையே கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்நிலையில் சிங்கப்பூரில் குழந்தைகளிடம் தீவிரமாக கொரோனா பரவிவருவதால் இந்தியா - சிங்கப்பூர் இடையேயான விமானசேவையை நிறுத்தவேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.