\
“ஷீலா தீக்ஷித் மறைவு மிகப்பெரிய இழப்பு” - அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல்

“ஷீலா தீக்ஷித் மறைவு மிகப்பெரிய இழப்பு” - அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல்

“ஷீலா தீக்ஷித் மறைவு மிகப்பெரிய இழப்பு” - அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல்
Published on

ஷீலா தீக்ஷித் மறைவிற்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், டெல்லி மாநில முன்னாள் முதல்வருமான ஷீலா தீக்ஷித் இன்று காலமானார். மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஷீலா மறைவிற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டரில், “ஷீலா தீக்ஷித் உயிரிழந்தார் என்ற அதிர்ச்சிகரமான செய்தியை இப்போதுதான் தெரிந்தது. டெல்லி மாநிலத்திற்கு இது மிகப்பெரிய இழப்பு. அவரது பங்களிப்பு எப்போதும் நினைவு கூறப்படும். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல். அவரது ஆன்மா சந்தியடையட்டும்” என்ற குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஷீலா தீக்ஷித் மறைவு எங்களுக்கு வருத்தத்தை எற்படுத்தியுள்ளது. கடைசிவரை காங்கிரஸ் பெண்ணாகவும், மூன்று முறை டெல்லி முதல்வராகவும் இருந்த அவர், டெல்லியின் முகத்தை மாற்றியவர். அவரது குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். இந்த நேரத்தில் அவர்கள் மன உறுதியுடன் இருப்பார்கள் என நம்புகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com