\
ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் பைலட் மரணம்.!

ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் பைலட் மரணம்.!

ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் பைலட் மரணம்.!
Published on

இந்திய ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒரு விமானி உயிரிழந்துள்ளார்.

இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான சீட்டா வகை ஹெலிகாப்டர், அருணாசலப் பிரதேசம் மாநிலத்தில் தவாங் பகுதியில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒரு விமானி உயிரிழந்தார். மற்றொரு விமானி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். சீன எல்லைக்கு அருகே, வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த இரு பைலட்டுகளும் மீட்கப்பட்டு அருகில் இருந்த ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில், சவுரவ் யாதவ் என்ற விமானி, சிகிச்சை பலனின்றி இறந்துபோனதாகவும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com