டெல்லி கிரிக்கெட் மைதானத்திற்கு அருண் ஜெட்லி பெயர் 

டெல்லி கிரிக்கெட் மைதானத்திற்கு அருண் ஜெட்லி பெயர் 

டெல்லி கிரிக்கெட் மைதானத்திற்கு அருண் ஜெட்லி பெயர் 
Published on

டெல்லி கிரிக்கெட் மைதானத்திற்கு மறைந்த முன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானம் அருண் ஜெட்லி மைதானம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டெல்லி கிரிக்கெட் சங்கத்தலைவராக அருண் ஜெட்லி பதவி வகித்த நிலையில் அவரது நினைவாக பெயர் சூட்டப்பட்டது. 

முன்னதாக உடல் நலக்குறைவால் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை காலமானார். இதையடுத்து டெல்லியில் உள்ள நிகம்போத் மயானத்தில் அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com