இந்தியா
பட்ஜெட் குறித்த பொதுமக்கள் கேள்விக்கு பதிலளிக்கிறார் அருண் ஜேட்லி
பட்ஜெட் குறித்த பொதுமக்கள் கேள்விக்கு பதிலளிக்கிறார் அருண் ஜேட்லி
பட்ஜெட் குறித்த பொதுமக்களின் கேள்விக்கு நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று மாலை 7 மணிக்கு பதிலளிக்க உள்ளார்.
2018-19 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட்டில், விலைவாசி குறைய நடவடிக்கை, வருமான வரி விலக்கு வரம்பு உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகளை நடுத்தர வர்க்க மக்கள் மிகவும் எதிர்பார்க்கின்றனர்.
இதனிடையே பட்ஜெட் குறித்த பொதுமக்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று மாலை 7 மணிக்கு பதிலளிக்கிறார். தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு அருண் ஜேட்லி பதிலளிக்க உள்ளார். பொதுமக்கள் தங்களது கேள்விகளை #AskYourFM என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட்டு கேள்விகளை பகிரலாம்.