அருண் ஜெட்லிக்கு சிகிச்சை : இடைக்கால நிதியமைச்சரானார் பியூஸ் கோயல்

அருண் ஜெட்லிக்கு சிகிச்சை : இடைக்கால நிதியமைச்சரானார் பியூஸ் கோயல்

அருண் ஜெட்லிக்கு சிகிச்சை : இடைக்கால நிதியமைச்சரானார் பியூஸ் கோயல்
Published on

மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி சிகிச்சைக்காக அமெரிக்க சென்றுள்ளதால், அவரது நிதித்துறை மத்திய ரயில்வேதுறை அமைச்சர் பியூஸ் கோயலிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சராக பதவி வகித்து வந்த அருண் ஜெட்லி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். இதனால் அவரது துறையை மத்திய ரயில்வேதுறை அமைச்சர் பியூஸ் கோயலிடம் ஒப்படைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அத்துடன் இலாக இல்லாத மத்திய அமைச்சராக அருண் ஜெட்லி தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மத்திய அரசின் சார்பில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ளார். பிரதமர் மோடியின் பரிந்துரையின் பேரில், குடியரசுத் தலைவர் இந்தத் துறை மாற்று அறிவிப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளார். 

அடுத்த மாதம் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளதால், அதற்கான அறிவிப்புகளை நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அறிவித்தாக வேண்டும். இந்நிலையில் அருண் ஜெட்லி அமெரிக்காவிற்கு சிகிச்சை பெற சென்றுவிட்டார். எனவே இடைக்கால பட்ஜெட் தாக்கலின்போது அமைச்சர் இருக்க வேண்டும் என்பதற்காக, ஜெட்லியின் துறை கோயலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பே ஒருமுறை அருண் ஜெட்லி சிகிச்சை பெற்ற போது அவரது துறை கோயலிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை முடிந்து மீண்டும் ஜெட்லியிடம் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com