\
வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை: அருண் ஜெட்லி

வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை: அருண் ஜெட்லி

வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை: அருண் ஜெட்லி
Published on

‘தனி நபர் வருமான வரி உச்சவரம்பில் எந்தவித மாற்றமில்லை’ என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2018-2019-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி   பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்து வருகிறார். இதில் தனி நபர் வருமான உச்சவரம்பு குறைக்கப்படும் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் அதற்கு மாறாக, அதில் மாற்றமில்லை என்று அருண் ஜெட்லி அறிவித்தார். வருமான வரி விலக்கிற்கான வரம்பு 2.5 லட்சம் என்பதில் மாற்ற்மில்லை, அது அப்படியே தொடரும் என்று அவர் அறிவித்தார். இந்த அறிவிப்பு மாத சம்பளம் வாங்குவோருக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com