\
அருண் ஜெட்லி உடல்நிலை மேலும் கவலைக்கிடம் 

அருண் ஜெட்லி உடல்நிலை மேலும் கவலைக்கிடம் 

அருண் ஜெட்லி உடல்நிலை மேலும் கவலைக்கிடம் 
Published on

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில் அவருக்கு உயிர்க்காக்கும் கருவிகள் பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜெட்லி கடந்த 9ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் பிரச்னைக்காக அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை மறுநாளே மோசமான நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து அவருக்கு உயிர்க்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

எக்மோ கருவி பொருத்தப்பட்டு சுவாசிக்க உதவி செய்யப்படுவதாகத் தெரிகிறது. 10ம் தேதிக்கு பிறகு ஜெட்லியின் உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியாகவில்லை. நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று அருண் ஜெட்லியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். அவர்களை தொடர்ந்து உத்திரப் பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் மாயாவதி ஜெட்லியின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com