அருண் ஜெட்லிக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை!

அருண் ஜெட்லிக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை!

அருண் ஜெட்லிக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை!
Published on

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்படுகிறார். அவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் இதனால் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க வீட்டில் ஓய்வெடுக்குமாறும் டெல்லி எய்ம் ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதனால்  கடந்த 2-ம் தேதி முதல் அவர் தனது அலுவலகத்துக்குச் செல்லவில்லை. மாநிலங்களவை உறுப்பினராக மீண்டு ம் தேர்வு செய்யப்பட்ட அவர், பதவியேற்றுக் கொள்ளவும் இல்லை. அலுவலகப் பணிகளை வீட்டில் இருந்தவாறே கவனித் து வருகிறார். மருத்துவர்கள் குழு வீட்டுக்கே வந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். 

இதை அருண் ஜெட்லியும் உறுதிப்படுத்தியுள்ளார். `சிறுநீர நோய்த்தொற்று தொடர்பான பிரச்னைகளுக்காக சிகிச்சை எடுத் து வருகிறேன். இதன் காரணமாக வீட்டிலிருந்தபடியே அலுவலக வேலைகளைக் கவனித்து வருகிறேன். அடுத்த கட்டமாக எனக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்து மருத்துவர்கள் முடிவு செய்வார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.  
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com