அமெரிக்காவிலிருந்து திரும்புகிறார் அருண் ஜேட்லி?

அமெரிக்காவிலிருந்து திரும்புகிறார் அருண் ஜேட்லி?
அமெரிக்காவிலிருந்து திரும்புகிறார் அருண் ஜேட்லி?

மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி சிகிச்சை முடிந்து அமெரிக்காவிலிருந்து இந்த வாரம் இறுதியில் திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய நிதியமைச்சராக இருந்த அருண் ஜேட்லி அண்மைக்காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார். இதனால் கடந்த ஆண்டு அவர் சிகிச்சை எடுப்பதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவருக்கு பதிலாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டார். பின்னர் ஜேட்லி திரும்பியதும் நிதித்துறை அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதேபோன்று கடந்த ஜனவரி 23ஆம் தேதி அருண் ஜேட்லி சிகிச்சைக்காக சென்றபோது அவரது நிதித்துறை மீண்டும் பியூஷ் கோயாலிடம் சென்றது. அத்துடன் இலக்காக இல்லாத மத்திய அமைச்சராக அருண் ஜேட்லி இருப்பார் என அறிவிக்கப்பட்டது.

ஜேட்லி சிகிச்சைகாக அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனை பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். அருண் ஜேட்லி சிகிச்சை பெற்று வரும் போதிலும், சமூக வலைத்தளங்களில் எப்போதும் போலவே கருத்துகளை பதிவிட்டு வருகிறார். அத்துடன் அவருக்கு சிகிச்சைகள் முடிந்து, தற்போது ஓய்வெடுத்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வார இறுதியில் அவர் இந்தியா திரும்புவார் என்றும், மருத்துவர்கள் அனுமதித்தால் அடுத்த வாரம் நடைபெறும் பட்ஜெட் தொடர்பான கேள்விகள் கூட்டத்தில் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com