\
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜெட்லி அனுமதி

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜெட்லி அனுமதி

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜெட்லி அனுமதி
Published on

உடல் நலக்குறைவு காரணமாக மத்திய முன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அருண் ஜேட்லி அண்மைக்காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார். இதனால் கடந்த ஆண்டு அவர் சிகிச்சை எடுப்பதற்காக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவருக்கு பதிலாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டார். 

அதனையடுத்து, நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும் அருண் ஜெட்லி போட்டியிடவில்லை. அவர் அமைச்சர் பதவியும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். உடல்நிலை சிக்கல் காரணமாக அரசியலில் இருந்து சற்றே ஒதுங்கி இருந்தார். இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அருண்  ஜெட்லியின் உடல்நிலைக் குறித்து விசாரிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருகை தரவுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com