தாக்குதலும்.. சர்ச்சையும்.. : அர்னாப் கோஸ்வாமி அறிக்கை..!

தாக்குதலும்.. சர்ச்சையும்.. : அர்னாப் கோஸ்வாமி அறிக்கை..!
தாக்குதலும்.. சர்ச்சையும்.. : அர்னாப் கோஸ்வாமி அறிக்கை..!

தன் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் குறித்தும், போலீஸார் விசாரணை குறித்தும் ரிபப்ளிக் தொலைக்காட்சியைச் சேர்ந்த ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “கடந்த 12 மணி நேரத்தில் மும்பை போலீஸ் 2 நோட்டீஸ்களை எனக்கு அனுப்பி, சோனியா காந்தி குறித்த எனது விமர்சனம் பற்றி உடனே விசாரிக்க வேண்டும் என்றனர். சட்டத்தை மதிக்கும் குடிமகனாக அவர்களது விசாரணைக்காக நானே நாளை காலை ஆஜராவேன். அதேசமயம் என் மீதும், எனது மனைவி மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து மும்பை போலீஸ் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். அத்துடன் ரிபப்ளிக் டிவி அலுவலகத்தில் எனது மூத்த சக ஊடகவியலாளரைக் கடந்த 23ஆம் தேதி இரவு 12.15 மணியளவில் தாக்கியது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றேன்.



மேலும், இதுதொடர்பாக பலமுறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மும்பை போலீஸிடம் வலியுறுத்தியும் அவர்கள் நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டனர். அதுமட்டுமின்றி தாக்குதல் நடத்தத் தூண்டிய வத்ரா காங்கிரஸ் பிரமுகர் மீதோ, தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாகவோ, தாக்குதல் நடத்திய பின்னர் அதை அவர்கள் கொண்டாடியது தொடர்பாகவோ நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்தத் தாக்குதலில் வத்ரா காங்கிரஸ் பிரமுகருக்குத் தொடர்பில்லை என மறைக்க முடியாத வகையில், நான் மும்பை போலீஸ்க்கு ஆதாரங்களை வழங்கிக்கொண்டிருக்கிறேன். நான் அனைத்து ஆதாரங்களையும் வழங்கிய பின்னரும், இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீஸார் வத்ரா காங்கிரஸ் பிரமுகருக்காக ஒருதலைபட்சமாகவோ, சதித்திட்டத்திற்கு உடந்தையாகவோ இருக்கமாட்டார்கள் என நம்புகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டதாக அர்னாப் கோஸ்வாமியை காங்கிரசார் விமர்சித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com