அனில் சவுகான்
அனில் சவுகான்முகநூல்

’ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது’ - முப்படைகளின் தலைமை தளபதி பேச்சு!

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்வதாகவும், எனவே இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டுமெனவும், முப்படைகளின் தலைமை தளபதி தெரிவித்துள்ளார். இவரது பேச்சு தற்போது கவனம் பெற்றுவருகிறது.
Published on

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்வதாகவும், எனவே இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டுமெனவும், முப்படைகளின் தலைமை தளபதி தெரிவித்துள்ளார். இவரது பேச்சு தற்போது கவனம் பெற்றுவருகிறது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர்.

பகல்காம் தாக்குதல்
பகல்காம் தாக்குதல்web

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், இந்தியா தாக்குதலைத் தொடங்கி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் பதில் தாக்குதலைத் தொடங்கியதால், அதை இந்தியா தகர்த்தது. இதனால் இரு நாட்டின் எல்லைப் பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டன.

பின்னர் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவை நோக்கி பறந்து வந்த 6 டிரோன்களை எல்லைப்பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். அதே சமயம் சர்வதேச எல்லையில் கூடுதல் பாதுகாப்பு படையினர் பணியமர்த்தப்படுவார்கள் என பிஎஸ்எப் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்வதாகவும், எனவே இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டுமெனவும், முப்படைகளின் தலைமை தளபதி தெரிவித்துள்ளார். இவரது பேச்சு தற்போது கவனம் பெற்றுவருகிறது.

அனில் சவுகான்
அனில் சவுகான்முகநூல்

டெல்லியில் கருத்தரங்கு ஒன்றில் பேசிய அனில் சவுகான், ”தகவல், தொழில்நுட்ப போராளியாகவும், கற்று தேர்ந்தவராகவும் இருப்பவரே, வருங்காலத்தில் ராணுவத்திற்கு தேவைப்படும் வீரராக இருப்பார்கள். எல்லைகளில் சண்டையிடவும் பாலைவனங்களில் சாமர்த்தியமாக செயல்படவும், ட்ரோன்களை அழிக்கவும், சைபர் தாக்குதல்களை சமாளிக்கும் திறன் கொண்டவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். ஒரு போரில் 2-ம் இடம் பெறுபவர்கள் யாரும் இல்லை.

அனில் சவுகான்
அதிர்ச்சி...12 ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்த 4 வயது பெண் குழந்தை; பகீர் வீடியோ!

எந்த ராணுவமும் தொடர்ந்து உஷாராகவும், தயார் நிலையை பேணுபவர்களாகவும் இருக்க வேண்டும். உதாரணமாக ஆபரேஷன் சிந்தூரை எடுத்துக்கொண்டால், அது தற்போதும் தொடர்கிறது. நமது தயார் நிலை அளவு 365 நாட்களும், 24 மணி நேரமும் அதிகபட்சமாக இருக்க வேண்டும். ஒன்றிணைந்த ஒரு போர் சூழலில் ஒரு எதிர்கால போர் வீரன் என்பவன் ஒரு தகவல் வீரன், தொழில்நுட்ப வீரன், நிபுணத்துவ வீரன் என ஒரு கலவையாக இருக்க வேண்டும்.”என்று தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com